
க.பொ.த. சா தாரண தரப் பரீட்சைப் பெ றுபேறுகள் இம் மாதம் மூன்றாவ து வாரத்தில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜ னாதிபதி ஊ ட க மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே, கல்வி அமைச்சர் சு சில் பிரேம ஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் இ றுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், ப ரீ ட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட பரீட்சைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கடுமையாக செயற்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2 0 2 4 ஆம் ஆண்டு மே மா தத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்.