கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அனுஷ்கா ஷெட்டி. சிறந்த நடனக் கலைஞர் மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர். சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ரெண்டு படத்தில், அனுஷ்காவை யாரும் சரியாக கண்டுகொள்ளவில்லை. இதற்கும் அந்த படத்தில் பாடல் காட்சிகளில் செம கிளாமர் காட்டியிருந்தார் அனுஷ்கா.
ரெண்டு என்ற தமிழ் படத்தில் நடித்த பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கில் கவனம் செலுத்தினார். அப்போது அருந்ததீ என்ற படத்தில் நடித்தார். கதையின் நாயகியாக நடித்திருந்த அருந்ததீ நடிப்பும், அழகும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட அருந்ததீ படத்தில் அனுஷ்காவை பார்த்த ரசிகர்கள், அவரது அழகில் மிரண்டு போய்விட்டனர்.
அதன்பிறகு அனுஷ்கா, தமிழில் பல படங்களில் நடித்தார். ரஜினிகாந்த் உடன் லிங்கா, விஜயுடன் வேட்டைக்காரன், அஜித்குமாருடன் பில்லா, என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம் உள்ளிட்ட படங்களில் அனுஷ்கா நடித்தார்.
அனுஷ்கா மிக உயரமான நடிகை என்பதால், சற்று குள்ளமாக உள்ள நடிகர்களால் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாமல் போனது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பாகுபலி படத்தில் தேவசேனா கேரக்டரில் பாகுபலி பிரபாஸ் ஜோடியாக நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது.
இயக்குநர் ராஜமவுலி 2 பாகங்களாக எடுத்த இந்த படம், சரித்திர கால படங்களுக்கு முன் உதாரணமாக அமைந்தது. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், ரோகிணி, சத்யராஜ், நாசர் போன்றவர்களின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பாகுபலி படத்தில் நடித்த போதே பிரபாஸ், அனுஷ்கா இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாகி மாறியது. ஆனால் பிரபாஸ் வீட்டில் இதற்கு சம்மதிக்கவில்லை.
இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது, படத்தில் வரும் கேரக்டருக்காக மிக குண்டாக உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா.
ஆனால் அதற்கு பிறகு பலவிதமான உடற்பயிற்சி செய்தும், டயட்டில் இருந்தும் அவரது எடை குறையவே இல்லை. இதனால் 42 வயதிலேயே 50 வயது கடந்த பெண்மணி போல காணப்பட்டதால், அனுஷ்காவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் பிரபாஸ் – அனுஷ்கா திருமணத்துக்கு பிரபாஸ் வீட்டில் சம்மதித்து விட்டதாகவும் அடுத்த ஆண்டில் அவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகர் பிரபாஸை கரம் பிடிக்கிறார் அனுஷ்கா. பாகுபலி படத்தை போலவே, நிஜ வாழ்க்கையிலும் பாகுபலி தேவசேனா வாக இருவரும் இணைவதை அறிந்து, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர்.