Aswesuma December Payment Deposit -January intake of new users

Aswesuma December Payment Deposit -January intake of new users

அஸ்வெசும டிசம்பர் மாதத் தவணையைச் செலுத்துவதற்காக, 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ASWESUMA APPLICATION UPDATE (2024)

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க முன், முதற் கட்டம் தொடர்பான விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு, தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது..

அதேவேளை, இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மூலம், பயனாளிகளின் எண்ணிக்கையை இருபது இலட்சமாக உயர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதற்காக, 2024 ஆம் ஆண்டிற்கு 205 பில்லியன் ரூபா நிதி அஸ்வெசும திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான செய்தி

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனக்காகத் தெரிவு செய்யப்பட்டு கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, தாமதமின்றி கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

வங்கிக் கணக்குகளை உரிய வகையில் திறக்காததன் காரணமாக, ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment