தாய்வான் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை (03) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.