7 நாடுகளுக்கு இலவச விசா ! 2024.03.31 வரை மட்டும்
ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த விடயத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் (டுவிட்டர் ) பதிவிட்டுள்ளார். ஒரு முன்னோடி செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி(2024) வரை நடைமுறையில் இருக்கும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.